பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு இப்படி ஒரு ஆசையா?

பாரதி கண்ணம்மா இதை கேட்டதும் ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது சீரியல் தான்.

பெண்ணின் போராட்டத்தை மையமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் பெரிய ரீச் இல்லை என்றாலும் இப்போது சீரியல்களிலேயே TRPயில் இதுதான் முதலில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சீரியலுக்கு செம ரெஸ்பான்ஸ்.

இந்த வெற்றியில் நடிகை ரோஷினி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், சீரியலுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக உள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு பிடிக்கும். இதுவரை படங்களில் நான் வாய்ப்பு தேடியது இல்லை, ஆனால் இனி நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.