நாடு திரும்பிய 33 பேருக்கு கொரோனா

நாடு திரும்பிய 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில், கொரோனா வைரஸ் சோதனை செய்த 384 பேரில், 33 இலங்கையர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் நாட்டுக்கு திரும்பிய ஏராளமான இலங்கையர்கள், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையமானது பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வகைகள் குறித்தும் விழிப்புடன் இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பவும் தனிமைப்படுத்தவும் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

மேலும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த செயல்முறை கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.