தளபதி 65 படத்தின் ஷூட்டிங் இங்கு தான் நடக்க போகிறதா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஆம், Georgia-வில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தான் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த இடங்கள் தான் தளபதி 65 படத்திற்கான லொகேஷன் பார்க்க சென்ற இடங்கள் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar)