தோப்பில் சடலமாக கிடந்த தாய், மகள்… அருகில் சிதறிக்கிடந்த பணம்!

கடலூர் அருகே தாய், மகள் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (48). இவர்களுடைய மகள் மாதங்கி என்ற சந்தியா (24). மகன் சிவகுரு.

சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளதை அவதானித்த, மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாருக்கு விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், எதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவில்லை.

மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்ததை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.