பிக்பாஸ் வனிதா எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை வனிதா. அதன் பின் அவரின் லெவலே வேற என சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. அவரின் வாழ்க்கையும் அப்படித்தான் போனது.

டான் போல கெ த்து காட்டி வந்தவர் பீட்டர் பால் என்பவருடன் மூன்றாம் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும், சிலரின் எதிர்ப்பையும் சம்பாதித்த அவர் ஓய்ந்து போகும் அளவிற்கு பதிலடி கொடுத்து வந்தார்.

பீட்டர் பாலின் நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்த வனிதா அவரை விட்டு விலகினார். அமைதியான வனிதாவுக்கு சில ஆதரவு குரல் தொடர்ந்து வந்ததையும் மறுக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக வந்த அவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் சீசனின் வெற்றியாளரானார்.

தற்போது குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள அவர் சினிமாவிலும் நடிக்கவுள்ளாராம். நடமாடும் நகைக்கடை போல சுற்றி வந்த ரவி நாடார் என்பவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம். இதற்கான பட பூஜை போடப்பட்டுள்ளது.

புகைப்படங்களை வனிதா வெளியிட்டுள்ளார். அது சரி ஹீரோ யார் என கேட்கிறீர்களா? வேறு யாருமல்ல அந்த நடமாடும் நகைக்கடை மனிதர் தானாம்.