விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை ஜனனி ஐயர் இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

ஆம், லிப்ரா புரொடக்‌ஷனின் புதிய அலுவலகத்தை திறந்துள்ள நிலையில் தனது அடுத்தப்பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ‘முன்னறிவான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜயராஜ் இயக்குகிறார்.

மேலும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் பரத், ஜனனி ஐயர் உடன் விஜய் டிவி புகழ் மிர்ச்சி செந்தில், அஸார், சன் டிவி சித்தி 2 சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.