நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்..!!

கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா.

முல்லை கதாபாத்திரம் மூலம் எல்லோரின் வீட்டிலும் அவர்களது வீட்டு பெண்ணாக பார்க்கப்பட்டார்.

மிகவும் கஷ்டப்பட்டு பெரிய இடத்தை பிடித்த அவர் திடீரென மறைந்தது எல்லோரும் பெரிய சோகமாக உள்ளது. சித்ரா ஆசை ஆசையாக நடித்த அவரது முதல் படம் கால்ஸ்.

இன்று அப்படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க வரும் பெண்களுக்கு இலவச டிக்கெட் என படக்குழுவே அறிவித்துள்ளனர்.