காதலில் விழுந்த நடிகை அனு இமானுவேல்..!!

நடிகை அனு இமானுவேல் தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நடிகை.

மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

பின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது இவர் பிரபல இயக்குனரை காதலிப்பதாக தகவல் வந்துள்ளது.

அவரது பெயர் ஜோதி கிருஷ்ணா, இவர் வேறுயாரும் இல்லை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகனாம்.

இவர்கள் இருவரும் காதலில் விழுந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.