காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா!

சினிமாவில் பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து ஜோடிகளாக சுற்றி வருவார்கள். அதில் தமிழ் சினிமாவிலும் பல ஜோடி பிரபலங்கள் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இடம்பிடித்து உள்ளவர்கள் தான் சினேகா மற்றும் பிரசன்னா. இருவரும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்னும் படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆண் குழந்தைக்கு விகான் என்றும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா பெயர் வைத்துள்ளனர். தனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தால் ஆத்யந்தா என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தோம்.

ஆனால் எதிர்பாராத விதமாக முதலில் ஆண் குழந்தை பிறந்ததால் அந்த பெயரை வைக்க முடியாமல் விகான் என பெயர் வைத்ததாகவும் பின்பு நாங்கள் நினைத்தபடியே கடவுள் ஆசிர்வாதத்துடன் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்யந்தா என்ற பெயரே மீண்டும் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆத்யந்தா என்ற பெயருக்கு “ஆதியும் அந்தமும் அற்றவள்” என்று அர்த்தம் என பிரசன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது சினேகாவை விட பிரசன்னா ஒரு வயது சிறியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சினேகா அக்டோபர் 12ம் தேதி 1981 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஆனால் பிரசன்னா ஆகஸ்ட் 28ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது சினேகாவை விட பிரசன்னா ஒரு வயது சிறியவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.