மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. 7 நாட்கள் கட்டாயம் தனிமைபடுத்தவேண்டும்!

கொரோனா வைரஸ் ஆனது உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென சற்று அதிகரித்து வருகிறது.

இதனால், அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது.

கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.