காமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமா படத்தில் காமெடி நடிகராக இருந்து வந்த சீனிவாசன் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என இருந்து வந்தார்.

2013 ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் காமெடி நடிகராகனவர் மீது ரசிகர்களின் அன்பு கூடியது. பவர் ஸ்டார் என அடைமொழியிட்டு அழைத்து வந்தனர்.

லத்திகா என்னும் படத்தை தயாரித்து நகைச்சுவை வேடத்தில் தானும் நடித்திருந்தார். கட்சி தொடங்கினார். தேர்தலிலும் போட்டியிட்டார்.

மோசடி புகார் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாம்.

இச்செய்தி கேட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.