அந்த வார்த்தையே சொல்லிக்கிட்டு, அருகில் நெருங்காதீங்க…

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகிகளாக நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படம் வில்லன் நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது.

தளபதி விஜயின் நடிப்பு பாராட்டப் பட்டது என்றாலும் கூட விஜய் சேதுபதி அளவிற்கு அவரது கதாபாத்திரம் வரவேற்பை பெறவில்லை என்பது நிஜம். கதாநாயகிகளின் நிலையோ அதைவிட மோசம். இவர்களுக்கு படத்தில் சிறிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

மாளவிகா மோகனனை விட, நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொடுக்கப்பட்ட கதா பாத்திரம் படு மோசம். எதற்காக அவர், மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றார். எதற்காக இறுதியில் சண்டையிட்டார் என எதுவுமே புரியவில்லை.

இத்தகைய சூழலில் நடிகை ஆண்ட்ரியா இனி தளபதி விஜயின் திரை படங்களில் நடிக்கவே கூடாது என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஸ்ட் ரோல் என்று கூறிக்கொண்டு யாரும் வீட்டு பக்கம் வந்துடாதீங்க என்று திட்டவட்டமாய் ஆண்ட்ரியா கூறிவிட்டாராம்.