தன்னுடன் வரமறுத்த அக்கா மகள்… ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டிய தாய்மாமா!

இந்திய மாநிலமான தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை கிராமத்தை சேர்ந்தவர் ஒசராயப்பா(55). இவருக்கு கரி பீரம்மா என்ற மனைவியும், வெங்கடலட்சுமியம்மா(50) என்ற இரண்டாவது மனைவியும் இருந்துள்ளனர்.

ஒசராயப்பாவுக்கு கரி பீரம்மாவுடன் முதல் திருமணம் நடந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இவர் தனது அக்கா மகள் வெங்கடலட்சுமியம்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது மகன் முருகேசனுடன் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மாவை சமாதானப்படுத்த அவர் வீட்டுக்கு சென்று உள்ளார். மகன் முருகேசன்(35) வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவர் சமாதானப்படுத்தி அழைத்துள்ளார் ஒசராயப்பா.

ஆனால் ஒசராயப்பாவுடன் செல்ல வெங்கடலட்சுமியம்மா மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ஒசராயப்பா, அரிவாளால் கண், தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெங்கடலட்சுமியம்மாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த வெங்கடலட்சுமியம்மா மயங்கியுள்ளார்.

இதையடுத்து மனைவி இறந்து விட்டதாக நினைத்து பயந்துபோன ஒசராயப்பா அவசர அவசரமாக வீட்டின் பின்புறம் சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவலளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடலட்சுமியம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.