விஜய் மற்றும் ரஜினிக்கு இயக்குனர் கவுதம் மேனன் வைத்துள்ள கதை..!

இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்குபவர்.

இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளது.

மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்ட படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் Anthology படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், இதுவரை இவர் இணைந்து பணிபுரியாத ரஜினி மற்றும் விஜய்க்கு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆம், ரஜினிகாந்த் எமோஷனல் கதைகளில் நடிக்க முடியும் என்பதால், வாய்ப்பு கிடைக்கும்போது அப்படியான ஒரு கதையை அவரிடம் விவரிப்பேன் என்று கெளதம் குறிப்பிட்டார்.

மேலும் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியை இயக்க வேண்டும் என நீண்டகால ஆசை இருப்பதாகவும், முழுமையான ஸ்கிரிப்டுடன் விஜய்யை அணுகினால் அது நிச்சயம் பலனளிக்கும் என கூறியுள்ளார்.