இது பாரதி கண்ணம்மா இல்லடா..

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முக்கியமானது என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த தொடர் பல இல்லத்தரசிகளுக்கும் பிடித்தமானதாக அமைந்தது.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக அவர் நிறைய ரசிகர்களை பெற்றார். இவரது கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு மட்டும் நிறைய ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார். இதில் ஒரு குழந்தை அவருடனும், மற்றொரு குழந்தை அவருக்கே தெரியாமலும் வளர்ந்து வருகிறது. சீரியல் விரைவில் முடிவடைய போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இத்தகைய சூழலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்து ரவுடிபேபி போல போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் கவனம் பெற்று வருகிறது.