வானிலை மையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சபரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கு அதிகளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சபராகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.