தாக்குதலுடன் தொடர்புடைய யுவதி ஒருவர் கைது..!!

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப்பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்தறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹஸீமிடம் பயிற்சி பெற்ற மாவனெல்லையைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.