குளிக்கும் காணொளி கேட்ட காதலன்… நம்பி அனுப்பிய காதலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தமிழகத்தில் காதலன் ஒருவன் குளிக்கும் காணொளியினை கேட்டதால் நம்பி அனுப்பிய காதலிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை கூவத்தூர்காரன் குப்பத்தை சேர்ந்த கார்த்திக். 12ம் வகுப்பு படித்துவிட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு முகநூல் மூலம் கல்லூரி மாணவி ஒருவர் நட்பாக பேசி வந்துள்ளார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்தவர் ஆவார்.

இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், ஒருநாள் குறித்த பெண்ணிடம் குளிக்கும் காணொளியினை அனுப்ப காதலன் கேட்டுள்ளார்.

குறித்த கல்லூரி மாணவியும் தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர்தானே என்று நம்பி குளிக்கும் காணொளியினையும் அனுப்பியுள்ளார். சிலநாட்கள் கழித்து அந்த காணொளியினை வைத்தே பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ள வாலிபர்.

ஆம் பீஸ் கட்ட வேண்டும் என்று முதலில் 5 ஆயிரம் கேட்டுள்ளார். மாணவியும் ஐந்து ஆயிரத்தினை கொடுத்துள்ளார். பின்பு ஐந்து ஆயிரத்தினைக் கூட்டி 10 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

குறித்த மாணவி கல்லூரி படிக்கும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூற, உடனே கார்த்திக் மாணவியின் தந்தைக்கு போன் செய்து காணொளி விடயத்தினைக் கூறி 50ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த தந்தை தாமதிக்காமல் பொலிசில் புகார் கொடுத்ததையடுத்து, கார்த்திக்கின் பேஸ்புக் மற்றும் அவரது செல்போன் நம்பரை தகவல்களை சேகரித்துவிடடு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இதுபோன்று இந்த இளைஞர் 10 பெண்களை இவ்வாறு ஏமாற்றி பணம் பறித்துள்ளது அம்பலமாகியுள்ளது.