நெல் அறுவடைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடைக்கு சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 06ம் யூனிட் சிவிற் சென்ரர் வட்டக்ச்சி 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நெல் அறுவடைக்காக அங்கு சென்ற நிலையில், அதை முடித்துக்கொண்டு நேற்றையதினம் இரவு குளிக்கச் சென்ற நிலையில் காணவில்லை என தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் கொண்டு சென்ற ஆடை மற்றும் சவற்காரம் ஆகியன கிணற்றருகில் இருந்ததை அவதானித்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் அயலவர்களுக்கு தகவல்களை வழங்கியதுடன், குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.