கொரோனாவால் அழுகிய பெண்ணின் விரல்கள்! பேரதிர்சியில் உறைந்த மருத்துவர்கள் எச்சரிக்கை…

இத்தாலியில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு 3 விரல்கள் அழுகியதால், அவற்றை வெட்டி அகற்றியுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் விரல்கள் கருப்பு நிறத்தில் அழுகிய புகைப்படம் ஒன்று வாஸ்குலர் மற்றும் என்டோ வாஸ்குலர் சர்ஜரி என்ற மருத்துவ இதழில் வெளியானது.

இந்தப் புகைப்படம் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது. காரணம், கொரோனா வைரஸால் நுரையிரல், சிறுநீரகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், உடலில் உள்ள உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இதழில் வெளியான கட்டுரையில், 86 வயதான மூதாட்டி ஒருவர் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்த அறிகுறியும் உடலில் காட்டவில்லை. திடீரென உடலில் உள்ள பாகங்கள் கருமையாக மாறி அழுகல் ஏற்பட்டவுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

அப்போது, இத்தாலி மருத்துவர்களின் கூற்றுப்படி கொரோனா வைரஸின் உட்சபட்ச நிலைகளில் ஒன்றான நீக்ரோடிக் எனப்படும் ரத்த உறைதலால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைந்து இதயத்துக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் அடிப்படையில் மூன்று விரல்களிலும் செல்கள் இறந்துவிட்டதை உறுதிசெய்து அகற்றப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.