லசித் மலிங்கவின் இடத்தை நிரப்புவது கஷ்டம்.. மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது இவருக்கு தான்!

கடந்த வாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.

அதில் முக்கியமாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதனால் மேற்கிந்தியாவுக்கான இலங்கை அணியின் பயணம் ஒத்தி வைக்கப்படும் என தகவல் கசிந்தது.

கொரோனா தொற்றால் முடங்கிப் போயிருந்த விளையாட்டு உலகம் தற்போது மீண்டும் உயிர் பெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 வீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்தது.

அதுமட்டுமின்றி 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டம் கட்டாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.