நடிகர் கமலால், கடுப்பாகி சேரன் எடுத்த முடிவு.!

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சேரன் தான் கமலின் மகாநதி படத்தில் பணி செய்த அனுபவம் குறித்து பேசி இருக்கின்றார்.

கோலிவுட்டில் தனது தரமான படைப்பு காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் சேரன். அதன் பின்னர் அவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். இருப்பினும், தற்போது இரண்டிலும் வாய்ப்புகள் இல்லாத நிலையில் சேரன் புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில், சமீபத்தில் சேரன் அளித்த பேட்டி ஒன்றில் உலக நாயகன் கமல் நடித்த மகாநதி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில், “மகாநதி படத்தின் இயக்குனர் சந்தானபாரதிதான். இருப்பினும், அந்த படத்தின் அனைத்து வேலைகளையும் முடிவுகளையும் கமல் தான் எடுப்பர்.

எனவே, இதில் இருந்து என்னால் எதுவுமே கற்றுக் கொள்ள முடியாது. என்று ஒரு கட்டத்தில் கடுப்பாகி சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கே கிளம்பிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார். அதன் பின் இயக்குனர் சேரன் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்து நாட்டாமை போன்ற திரை படங்களில் வேலை செய்து இயக்குனராகியுள்ளார்.