தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு ஏற்படும் இயற்கை தீர்வுகள்.!

தாய்மையடைந்த பெண்கள் குழந்தைகளுக்கு முதல் முறையாக பாலூட்டுகையில், முதலில் மார்பக காம்புகள் என்பதும் முலைக்காம்புகள் மிருதுவாக இருக்கும். இதன்போது, எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. இதன்பின்னர், சில நாட்களுக்கு உள்ளாகவே மார்பக காம்புகளின் மிருதுவான தன்மை குறைந்து வலி எடுக்க துவங்கும். இதன்போது பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், மார்பக காம்புகளில் ஏற்படும் வலியானது வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை.

மார்பக காம்புகளில் ஏற்படும் வறட்சியால் புண் ஏற்பட்டு, குழந்தைகள் பால் குடிக்கையில் வலி அதிகமாகும். மார்பக காம்புகளில் ஏற்படும் வறட்சிக்கான காரணங்களை தெரிந்துகொண்டால், அதன் மூலமாக எளிமையான முறையில் இயற்கை வைத்தியங்கள் வாயிலாக அதனை ஓரளவு குணப்படுத்த இயலும்.

மார்பக காம்புகளில் புண் ஏற்பட காரணம்: 

1.குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்கள் சரியான முறையில் குழந்தைகளை பிடித்து தாய்ப்பாலூட்டாத பாதிக்கத்தில், மார்பக காம்புகளில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. குழந்தையின் வாய் தாயின் மார்பு அருகே கவ்வி இருப்பதால், தவறான நிலைகளில் குழந்தைகளுக்கு பாலூட்டுகையில் காம்பில் உராய்வு ஏற்பட்டு புண்கள் ஏற்படும்.

2.சில குழந்தைகள் தாயின் மார்பு பகுதியை கவ்வி இழுத்து பால் குடிக்கலாம். இதனாலும் புண்கள் ஏற்படும். குழந்தையை பிரசவித்த பின்னர் மார்பகத்தில் பால் சுரப்பதால், மார்பகம் சற்று பெரிதாக மாற்றமடையும். இதனால் மார்பகத்தின் தோல் பகுதிகள் விரிவடைந்து, மார்பக பகுதி மற்றும் மார்பக காம்புகளில் வறட்சி ஏற்படும். இதனால் தோல் வெடிப்புகள் மற்றும் புண்கள் ஏற்படும்.

மேற்கூறியுள்ள காரணத்தால் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுகையில், மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை அனுபவிப்பார்கள். இந்த வலிக்கு பயந்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை தவிர்க்கும் நிகழ்வுகளும் உண்டு. குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டாத பட்சத்தில், குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

மார்பக காம்புகளில் புண் இருக்கும் போது தாய்ப்பால் ஊட்டலாமா? என்ற சந்தேகம் இருக்கும். மார்பக காம்புகளில் புண் இருந்தாலும் குழந்தைகளுக்கு பால் ஊட்டலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் கிடையாது.

மார்பக காம்புகளின் வறட்சி மற்றும் புண் குணமாக இயற்கை வைத்தியம்: 

1.கற்றாழை:

கற்றாழை செடியின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சதையை மார்பாக காம்புகளில் தடவலாம். இதனால் கற்றாழை சதையில் இருக்கும் ஈரப்பத தன்மையானது, மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் உள்ள வறட்சியை சரி செய்யும். இதனைப்போன்று புண்களையும் குணப்படுத்தும்.

2.வெண்ணெய்:

சுத்தமான வெண்ணெய்யை எடுத்து மார்பக காம்புகளில் தடவினால், மார்பக காம்புகளில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த உதவி செய்கிறது.

3.ஐஸ்கட்டி:

புண்கள் ஏற்பட்டுள்ள மார்பகம் மற்றும் மார்பக காம்பு பகுதியில் அதிகளவு வலி ஏற்படும். இதனை சரி செய்ய ஐஸ்கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்கலாம். பருத்தியினால் ஆன உடையில் சிறிதளவு ஐஸ்கட்டியை வைத்து 10 நிமிடம் வரை மார்பக காம்பு பகுதியில் ஒத்தனம் கொடுத்தால் மார்பக காம்பு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.சுத்தம் முக்கியம்: 

பாலூட்டும் பெண்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் வராமல் இருக்க சுத்தமும் அவசியமாகிறது. மென்மையான மற்றும் போதிய அளவுள்ள உள்ளாடைகளை அணிவது சாலச்சிறந்தது. மிதமான இரசாயனம் கலக்கப்பட்ட துணி பவுடர்களை பயன்படுத்தலாம். அதிகளவு இரசாயனம் சேர்க்கப்பட்ட துணி பவுடர் அல்லது சோப்களை உபயோகம் செய்தால் மார்பக காம்புகளில் புண்கள் இருந்தால், வியர்வை மூலமாக அவை கரைந்து காம்பு பகுதியில் எரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

5.தாய்ப்பாலே மருந்து:

தாய்ப்பால் இயற்கையாகவே புண்களை சரி செய்யும் தன்மையை கொண்டது. கிருமி தொற்றுகளை அழிக்கும் குணத்தை தன்னகத்தே கொண்டது. மார்பக காம்பு மற்றும் மார்பகத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் புண் போன்ற பிரச்சனையை சரி செய்ய தாய்ப்பாலை மார்பக பகுதியில் தடவலாம்.

6.தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் பொதுவாக சருமத்தை மிருதுவாக மாற்றும். மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடவினால் தோலின் வறட்சி பிரச்சனை சரியாகும். மார்பகத்தில் உபயோகம் செய்யப்படும் எண்ணெயில் சுத்தமான எண்ணெய்யா? என சோதித்துக்கொள்ள வேண்டும். முடிந்தளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை உபயோகம் செய்ய வேண்டும்.

இதர எளிய ஆலோசனைகள்: 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கையில் குழந்தையை தொட்டில் நிலையில் பிடித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மார்பக காம்புகளை தங்களின் வாயால் கவ்வும் அளவுள்ள நிலையில் இருக்கிறார்களா? என்பதை சோதித்துக்கொள்ளவும். குழந்தைகள் தாய்ப்பால் குடித்ததும் தோளில் போட்டு, சிறிது நேரம் பொறுமையாக முதுகு பகுதியை மேலிருந்து கீழாக தடவிக்கொடுத்து தட்டிக்கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தைகளை உறங்கும் நிலையில் கீழே விடக்கூடாது. படுக்கை நிலையில் இருந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது.

மார்பகங்களுக்கு காற்றோட்டம் கிடைக்காத வகையில் இறுக்கமான ஆடைகளை அல்லது இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தளர்வான மற்றும் மிருதுவான ஆடைகளை உடுத்துவது நல்லது. சிறிதளவு துளசி இலைகளை எடுத்து அரைத்து மார்பக காம்பு பகுதியில் பூசி தூங்கி வந்தால், மார்பக காம்பு பகுதியில் ஏற்படும் வறட்சி மற்றும் புண்கள் பிரச்சனை சரியாகும். ஆரஞ்சு பழம், கொய்யாப்பழம், ஸ்டாபெரி, பசலைக்கீரை, முட்டைகோஸ், திராட்சைப்பழம் போன்றவற்றை அதிகளவு சமைத்தோ அல்லது சாறாகவோ பருகலாம்.

புண்கள் பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் எந்த விதமான தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு முன்னதாக மார்பகத்தை சுத்தம் செய்துகொள்வது நல்லது.