சாக்லெட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாம் சாக்லேட்டின் விரும்பிகளாக இன்றளவும் இருந்து வருகிறோம். சாக்லேட் என்றாலே சிறு வயது குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரும்புவார்கள். கருப்பு நிற சாக்லெட்டை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம். 

தினசரி இரண்டு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். சாப்பாடு சாப்பிட்ட பின்னர், காபி மற்றும் தேநீர் குடித்த பின்னர் கருப்பு சாக்லெட்டை சாப்பிடலாம். சாக்லேட்டில் அதிகளவு கலோரிகள் இருப்பதால், அதனை குறைந்தளவே சாப்பிடுவது நல்லது.

கருப்பு சாக்லேட்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் மூலமாக இதய நோய், புற்றுநோய் செல்களை உடலில் தங்கவிடாமல் பாதுகாக்கும். மேலும், உடலுக்கு தினமும் தேவையான ஆற்றலும் கிடைக்கும்.

இதில் இருக்கும் பிளவனோஸ் எனப்படும் பையோ ஆன்ட்டிக் மூலக்கூறுகள் சருமத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துகிறது. இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

மேலும், சாக்லேட்டில் இருக்கும் கோகோ இரத்த ஓட்டத்தினை அதிகரித்து, மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. குரல் வளத்தையும் அதிகரிக்க உதவி செய்கிறது. தமணிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, இரத்த அழுத்த பிரச்சனை சரியாகிறது. பாதம் கலந்த கருப்பு சாக்லேட் உடலுக்கு மேலும் நன்மையை தரும்.