இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேர் மரணம்

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவியது. தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்தியாவில் கோவிட்-19 க்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் தற்போது 22 பேர் இதுவரை இறந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்தது.

இதுவரை மரணமடைந்த 22 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்