8 நாட்கள் பிணமாக இருந்த சமுத்திரக்கனி.!

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி இருக்கின்ற ஏலே படத்தில் நடிகர் சமுத்திரக்கணி முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பின்னர், தற்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் உள்ளிட்டோர் இயக்கத்தில் ஏலே எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படம் தந்தை மகன் ஆகியோரின் பிணைப்பு குறித்து, படமாக உருவாகி இருக்கின்றது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் வெளியாகியது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்துக்காக சமுத்திரக்கனி 8 நாட்கள் பிணமாக மட்டுமே நடித்து இருப்பதாக கூறியுள்ளார். 8 தினங்கள் என்னை வெறுமனே கண்ணை மூடி படுக்க வைத்து படம் எடுத்தனர் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் இதுபோல தான், பிணமாக நடித்தது பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.