காதலியுடன் தனிமையில் இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி…

இந்தியாவில் காதலியுடன் நெருக்கமாக இருந்த போது, கையும் களவுமாக சிக்கிய கணவன், தன் தவறை உணர்ந்து என்னை மன்னித்துவிடு என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி அழுதுள்ள சம்பவம் புகைப்படமாக வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் முத்துராஜுக்கும், கம்பாபுராவை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்த தகவல் முத்துராஜின் குடும்பத்தினருக்கும், லட்சுமியின் குடும்பத்தினருக்கும் தெரிய வர, அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால் இதனைக் கண்டுகொள்ளாத இருவரும் தனிமையில் சந்தித்து வந்து்ளளனர்.

இதையடுத்து, நேற்று முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தார்வார் தாலுகா முகதா கிராமத்திற்கு சென்று அங்கிருந்த வேளையில், முதல் அங்கு வந்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பின்னர் இதுபற்றி அவர்கள் தார்வார் டவுனில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர். பின்னர் முத்துராஜிக்கு போலீசார் அறிவுரை வழங்கி மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர்.

இதனால் மனம் திருந்திய முத்துராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார். பின்னர் தான் செய்தது தவறு என்று உணர்ந்த முத்துராஜ், தனது மனைவி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், பொலிசார் மற்றும் அவ்வழியாக வந்து சென்றோரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர், நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுத புகைப்படம் வெளியாகியுள்ளது.