பெண் பொலிசார் செய்த காரியம்… மனமுடைந்து தற்கொலை செய்த கணவர்!

பெண் பொலிஸ் ஒருவர் தனது முதல் திருமணத்தினை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ததால் விரக்தியில் காதல் கணவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரைச் சேர்ந்தவர் யுவராஜ்(24). இவர் தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சங்கீதா(30) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்த பின்பு, சங்கீதாவிற்கு ஏற்கெனவே திருமணமானதும், அவருக்கு 8 வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதும் யுவராஜிற்கு தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் குடிபழக்கம் இருப்பதும், புருஷோத்தமன் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த இரண்டு விவகாரமும் யுவராஜ்க்கு தெரியவந்தள்ளது.. இதுபற்றி கேட்டபோது, அவர்களுக்குள் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்பு சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். காதலி ஏமாற்றியதால் மனமுடைந்த யுவராஜ் சென்னையில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 26ம் திகதி தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் சங்கீதா யுவராஜை சந்தித்து பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், வேறு இடத்திற்கு செல்வதாகவும் கூறியுள்ளார்..

இதனால் மனமுடைந்த யுவராஜ் ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது மரணத்திற்கு காதலித்து ஏமாற்றிய தனது மனைவி சங்கீதாவும், அவருடன் தொடர்பு வைத்திருக்கும் புருஷோத்தமன் என்பவர்கள் தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார்.

இருவரையும் கைது செய்யாமல் சடலத்தினை வாங்கமாட்டோம் என்று யுவராஜ் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.