சினிமாவில் கொடிகட்டி பறந்த அசின் இப்போ எப்படி ஆயிட்டாங்க பாருங்க.!

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை என்றால், அது அசின் தான். தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இதன் வெற்றியை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா ஆகிய அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக வலம் வரத் துவங்கினார்.

இவர் நடிப்பில் வெளியாகிய கஜினி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வலம் வருகின்றது. அசின் நடித்து இறுதியாக வெளியான திரைப்படம் விஜய்யின் காவலன் தான்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட அசின் தனது சினிமா வாழ்வை ஓரம் கட்டிவிட்டு குழந்தை குடும்பம் என்று கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அத்துடன் சினிமா நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இப்பொழுது பார்த்தால் கூட கதாநாயகி போலத்தான் இருக்கிறார். எனவே, இவர் படத்தில் நடித்தால் அருமையாக இருக்கும் என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.