வீட்டு ஓனர் செய்த மோசமான காரியம்…

தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்களை திருட்டுத்தனமாக காணொளி எடுத்த வீட்டு ஓனரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்(34). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகின்றார்.

இவரது வீட்டு மாடியில் 2 பெண்கள் குடியிருந்த நிலையில், இவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து ஒரே குளியலறை என்பதால் அதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜன் மனைவி, அவரது அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். இதன் போது தனியாக இருந்த ராஜன் தான் விரைவில் எழுந்து குளித்துவிட்டு வந்த பின்பு பாத்ரூமில் செல்போன் கமெராவை ஆன் செய்துவிட்டு வந்துள்ளார்.

இது தெரியாமல் குளிக்க சென்ற பெண்களை படம்பிடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இதனை தொடர்ந்து செய்துள்ள நிலையில், குறித்த பெண்ணில் ஒருவர் மறைத்து வைத்திருந்த செல்போனை அவதானித்துள்ளார்.

ராஜனின் செல்போனை எடுத்து கொண்டுபோய், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டி, நடந்த சம்பவத்தை குறித்தும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அவரை அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்பு பொலிசார் அந்த செல்போனை ஆய்வு செய்து பார்த்த போது ராஜன் பல நாட்களாக பெண்கள் குளிப்பதை இவ்வாறு காணொளி எடுத்து ரசித்துள்ளது தெரியவந்துள்ளது.