ரம்யா பாண்டியனுடன் கடலை போட முடியவில்லை! பிக்பாஸ் சோம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் காதல் ஜோடிகளை பற்றி ரசிகர்கள் அவர்களிடன் கேள்விகளை எழுப்பி வதந்திகளில் சிக்க வைப்பார்கள். அந்தவகையில் சமீபத்திய பிக்பாஸ் 4 சீசன் முடிந்தும் ஷிவானி – பாலாஜி காதல் பற்றி பேசி வந்தனர்.

ஆனால், சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம். ஆனால் சத்தமே இல்லாமல் காதலை வளர்த்து வந்துள்ளார்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி.

பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூத்து என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம்க்கு ரசிகர்கள் அனுப்ப அதனை காதல் ரசம் வழிய வழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தார் சோம் மாப்பிளையாக கிடைத்தால் நன்றாக இருக்கும் எனும் அளவுக்கு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். அவர்கள் நினைத்தது தற்போது நடந்து விடும் போல.

ரம்யா பாண்டியனின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும்தானா அல்லது வெளியேயும் தொடருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சினிமா வாய்ப்பு நிறைய கிடைத்தால் சோமுக்கு டாட்டா தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.