பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.!

கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தது.

தற்போது ரைட்டர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். இதற்கு பொம்மை நாயகி என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. யோகி பாபு உடன் சில முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். தயாரிப்பாளரான பா.ரஞ்சித் படப்பிடிப்பில் கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.