மீனாவுடன் அப்பவே நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் அவர் குறித்த தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

2017ம் ஆண்டு பாலாஜி விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

‘கனெக்ஷன்’ என்ற பிரபலமான நிகழ்ச்சியில் அவர், பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பங்கேற்ற வீடியோ சமீபத்தில் வைரலானது.

அதேபோல் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், பிரபல நடிகை மீனாவுடன் ஜீ ஆப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

‘கரோலின் காமாக்ஷி (Karoline Kamakshi)’ என்றஅந்த தொடரில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.