நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பிரபல நடிகை..!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் ராங் டே திரைப்படம் வெளியாக காத்துருக்கிறது. தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

இவர் நடிப்பில் கிட்டத்தட்ட சுமார் 8 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் தனது இன்ஸ்டகிராமில் தனது லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘ நீங்கள் பார்ப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறீர்கள் ‘ என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..