தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்..

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனி படைத்த சாதனையை, தற்போதைய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் முறியடித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ரஹானே அவுட் ஆனதும் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட் தனது 1000 ரன்களை கடந்தார்.

ரிஷப் பண்ட் இந்த சாதனையை 27 இன்னிங்சில் செய்துள்ளார். இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களில் தோனி 32 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்தார். தற்போது குறைவான இன்னிங்சில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட். இதற்கு முன்பு ஆயிரம் ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களில் பரூக் இஞ்சினீர், சாஹா, நயன் மோங்கியா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.