உடலுக்கு நன்மை சேர்க்கும் மூலிகை டீ.. !!

காலையில் நாம் தேநீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால், உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் ஒன்பது பொருட்களை தேநீராக பாலில் கலந்து அல்லது நீரில் கலந்து கொதிக்கவைத்து குடித்தால், எவ்விதமான நோயும் நம்மை நெருங்காது. உடலுக்கு நன்மை கிடைக்கும்.

மூலிகை தேநீர் செய்ய தேவையான பொருள்:

இஞ்சி – 1 கிண்ணம்,
கிராம்பு மற்றும் பட்டை – 10,
அன்னாசிப்பூ – 5,
ஏலக்காய் – 5 கிராம்,
துளசி – ஒரு கைப்பிடி,
மிளகு – 5 கிராம்,
அதிமதுரம் – 2 சிறிய கரண்டி,
அஸ்வகந்தா – 1/4 சிறிய கரண்டி.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட இஞ்சியை தோல் சீவி நீரில் நன்றாக அலசி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெயிலில் நீர் உலரும் வரை காய வைத்து, துளசியை நீரில் அலசி வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.

பின்னர், அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை வறுத்து, மிக்சியில் பொடியாக அரைத்து எடுத்து கோலா வேண்டும்.

இதனையடுத்து அந்த பொடியுடன், அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை கலந்து தினமும் பாலில் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலில் எந்த விதமான நோயும் ஏற்படாது.