KGF- பட நாயகியின் கிளாமர் போஸால் அதிரும் இணையம்!

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரைப்படம் வெளியானது.

கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வசூலை கண்டு கன்னட திரை உலகமே கதிகலங்கி போய் உள்ளது. கே.ஜி.எஃப் படம் பாகுபலியை விட நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டது.

கன்னட பாக்ஸ் ஆபிஸில் 129 கோடி வசூல் செய்துள்ள படம் பாகுபலி 2 ஆகும். இதனை கே.ஜி.எஃப் படம் முறியடித்தது. கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது, முடிவடைந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் டீசர் முதல் பாகத்தைப் போல மாஸான அதிரடி காட்சிகள் அதிகம் இடம்பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த படத்தில் மிகவும் திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கு இவரை ராக்கி விரட்டி விரட்டி காதலிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இவர் முதலில் ராக்கியை வெறுத்தாலும் பின்னர், அவரை காதலிப்பது போல படம் சுவாரஸ்யமாக இருக்கும். தற்போது உருவாகி உள்ள கே.ஜி.எஃப் 2 – படத்திலும் ஸ்ரீ நிதி ஷெட்டி தான் கதாநாயகி. இந்நிலையில், அவர் பிகினி உடையில் தனது வைரலாகி வருகின்றது.