இன்று வடக்கு – கிழக்கு முற்றாக முடங்கும்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு இடம்பெறும்.

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்த போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தனியார் துறைகள் திட்டமிட்டுள்ளன.

இதன்படி வடக்கு கிழக்கில் முக்கிய அனைத்து நகரங்களிலுமுள்ள வர்த்தக சங்கங்களும், இன்றைய முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

இன்று உணவகங்களும் திறக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தனியார் போக்குவரத்து துறையினரும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.

இன்று அனைத்து துறைகளும் முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன், சிறுபான்மையினர் மீதான அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இன்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சிவில் சமுக அமைப்புகள் பூரண ஆதரவு வழங்க உள்ளமை சிறப்பம்சமாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.