இத்தாலியில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கதி..!!

இத்தாலியின் மிலன் நகரில் வேலை தேடிய இலங்கை பெண் ஒருவரிடம், இலங்கையர் ஒருவர் தகாத முறையில் இலஞ்சம் கோரிய விவகாரம் குறித்து இத்தாலியிலுள்ள இலங்கை தூதரகம், மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன விசாரணை நடத்து வருவதாக அறிவித்துள்ளன.

இத்தாலிக்கு வேலை தேடிச் சென்ற யுவதியொருவர், அங்கு வேலையிழந்த பின்னர் புதிய வேலை தேடிய போது, இலங்கையை சேர்ந்த ஆணொருவர் அவரிடம் தகாத முறையில் இலஞ்சம் கோரியுள்ளார்.

யுவதி தன்னுடன் தகாத முறையில் இருந்தால் வேலை பெற்றுத்தருவதாக அவர் கேட்டுள்ளார்.

இது குறித்து அந்த யுவதி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனக்கு நேர்ந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்படுகிறது.

இப்படியான சம்பவங்கள் குறித்து சட்டத்தை அமுல்ப்படுத்தும் நிறுவனங்களில் முறையிட பெண்கள் தயங்க வேண்டாம் என்றும் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வாறான செயலுக்கு நடவடிக்கை எடுத்தால் பல சீரழிவுகள் தடுக்கப் படும் எக் கூறப்படுகிறது.