வடிவேலு பட காமெடி போல் எல்.இ.டி பல்பை விழுங்கிய சிறுவன்.!!

சிறுவன ஒருவன் எல்.இ.டி பல்பை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறுதலாக எல்.இ.டி பல்பு ஒன்றை விழுங்கியுள்ளான்.

இந்த பல்பு சிறுவனின் நுரையீரல் பாதையில் சென்று சிக்கியதால் கடும் வலியால் சிறுவன் துடித்து உள்ளான்.

இதனையடுத்து, அந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவர்கள் அந்த பல்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.