2021 ஆம் ஆண்டு என்ன நடக்கப்போகுது தெரியுமா?

2021இல் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதை பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் சுமார் 465 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனால், வரும் காலத்தில் நடக்கக்கூடியவற்றை முன்கூட்டியே கணித்தது மட்டுமல்லாமல், அவை நிஜமாகவே நடந்தது வரலாறு.

ஹிட்லரின் எழுச்சி, முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடியின் கொலை, 9/11 தாக்குதல் உள்ளிட்டவற்றை நாஸ்ட்ரடாமஸ் முன்கூட்டியே கணித்துள்ளார்.

3797ஆம் ஆண்டு வரை இவர் பல விஷயங்களை கணித்துள்ளார். அதில், 2021ஆம் ஆண்டில் என்னென்ன கணித்து சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

​ஜாம்பிகளின் எழுச்சி

பாதி மரணமடைந்து, பாதி உயிருடன் சுற்றக்கூடிய மனிதர்களை உருவாக்கும் நோய் 2021ல் பரவத் தொடங்குமெனவும், ஏராளமானோர் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

​உலக பஞ்சம்

2021ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, இந்தாண்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநாவும் எச்சரித்துள்ளது.

​விண்கல் தாக்குதல்

தீயால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் எனவும், மிகப்பெரிய விண்கல் தாக்கப்போவதாகவும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம்

மேற்குலகத்தில் மிகப்பெரிய இயற்கை சீற்றம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். குறிப்பாக நிலச்சரிவு அல்லது நிலநடுக்கம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

​மூன்றாம் உலகப் போர்

மிகப்பெரிய உலகத் தலைவரின் மரணத்தின் விளைவாக, மூன்றாம் உலகப் போர் உருவாகும் என மிக ஆபத்தான கணிப்பையும் நாஸ்ட்ரடாமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.