என்னை உன்னால் தூக்கி அடிச்சிட முடியாது? கடும் கோபத்தில் நெற்றிக்கண்ணை திறந்து பாலாவுக்கு சவுக்கடி கொடுத்த கமல்!

ஆரிக்குத் தான் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் அதிகமா இருக்கு, என்பதை புரிந்து கொண்டு, இந்த வாரம் ஆரிக்கு எதிராக திரண்ட ஹவுஸ்மேட்களை வெளுத்து விட்டார் கமல்.

அப்பாடா ஒரு வழியா கமல் எல்லாத்தையும் கேட்டுட்டார்.

கடைசியாக ஆரிக்கும் அறிவு இருக்கா? மாற முயற்சி பண்ணுங்க என குட்டு வைத்து தெறிக்கவிட்டுவிட்டார் என்றும் கமல் ஆன் ஃபயர் என்றும் சமூக வலைதளங்களில் கமலை கடைசியாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.


அதே சமயம் கமலும் ஆரியும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என ஆரி ஹேட்டர்ஸ் பொங்கி வருகின்றனர்.

ஆரிக்குத் தான் சோஷியல் மீடியாவில் சப்போர்ட் அதிகமா இருக்கு, உள்ளே போறீங்க பாலா மற்றும் மத்த ஹவுஸ்மேட்களை வெளுத்து விட்டு சனிக்கிழமை எபிசோடை முடிச்சுடுங்கன்னு சொல்லி அனுப்பி இருப்பாங்க போல, நெற்றிக்கண்ணை திறந்து பாலாவை சுட்டெரித்து விட்டார்.

பாலாவுக்கு எத்தனை முறை அட்வைஸ் சொல்லியும் அவர் இன்னும் திருந்தாமல் இருக்கிறாரே என்கிற கோபத்தை கமல் நாசுக்காக வெளிப்படுத்தி மிரட்டினார். நான் மைக்கோ தலையணையோ கிடையாது. என்னை உன்னால் தூக்கி அடிச்சிட முடியாது என பாலாவுக்கு சரியான சவுக்கடி கொடுத்த கமலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்த்த சிறப்பான தரமான சம்பவம் இந்த எபிசோடு தான் என்றும், கமல் ஆன் ஃபயர் என்றும் ரசிகர்கள் கமல்ஹாசனை பாராட்டி வருகின்றனர். பாலாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் வச்சு விளாசி விட்டார். ஆரி உள்பட என்று கமலுக்கு பாராட்டு மழை பொழிகிறது.

கமல்ஹாசனோட அவதாரமாத்தான் ஆரி பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்றும், ஆரிக்கு மட்டுமே கமல் சப்போர்ட் செய்து பேசுகிறார் என்றும் ஆரியின் ஹேட்டர்கள், பாலாவின் ரசிகர்கள், ரியோ, ரம்யா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் நேற்றிலிருந்து ஒரு கேம் ஷோவுக்காக இவங்க வெளியே அடிச்சிக்கிறாங்க, கமல் பெயரையும் டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.

தன் பேச்சை கேட்காமல் எதிர்த்து இனியும் பேசிக் கொண்டே இருந்தால், பெரிய பிரேக் கொடுத்துட்டு போயிடுவேன் என கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வார்த்தைகளையும் போகிற போக்கில் எடுத்து சொல்லி விட்டார். அந்த அளவுக்கு கமலையும் இந்த சீசன் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் ரசிகர்கள் கடுப்பாக்கி உள்ளனர்.

அதுதான் கமல் மிரட்டி, திட்டி விட்டுட்டாரே, இதுக்கு மேல ரெட் கார்டுலாம் விஜய் டிவி கொடுப்பாங்கன்னு நினைக்காதீங்க, அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்தையே மூடி மறைச்சவங்க, இந்த சைக்கோ சண்டைக்கெல்லாம் ரெட் கார்டு கொடுக்க மாட்டாங்க, ஒருவேள டைரக்டர் அப்படி ஸ்க்ரிப்ட்ல எழுதினா அப்போ பார்த்துக்கலாம் என்று நெட்டிசன்கள் நக்கலடிக்க தொடங்கி விட்டனர்.