தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்..!!

தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தென்னிந்திய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இந்தியளவில் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பழைய செல்பி புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது.

அதில் அவர்கள் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் உள்ளனர், இதோ அந்த புகைப்படம்.