அஸ்வின் சுழலில் சுருண்டது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

மெல்போர்னில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் மளமளவென சரிந்த அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருண்டது.

மத்தேயு வேட் (30), ஜோ பர்ன்ஸ் (0), மார்னஸ் லாபுசாக்னே (48), ஸ்டீவன் ஸ்மித் (0), டிராவிஸ் ஹெட் (38), கேமரூன் கிரீன் (12), டிம் பெய்ன் (13), பாட் கம்மின்ஸ் (9), மிட்செல் ஸ்டார்க் (7), நாதன் லியோன் (20) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜோஷ் ஹேசில்வுட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.