சருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ நீர்!

குங்குமப்பூ “சிவப்பு தங்கம்” என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.

பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது.

குங்குமப்பூ உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

இதில் தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். குங்குமப்பூ நீரை பருகுவதன் மூலம் சருமத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம்.

அந்தவகையில் இதனை குடிப்பதனால் சருமத்திற்கு ஏற்படும் நன்மை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் குங்குமப்பூ நீர் பருகினால் அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பார்க்கும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கும் தன்மை கொண்டது. அது உடல்நிலையிலும், மன நிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • குங்குமப்பூவில் இருக்கும் சில ஆன்டி ஆக்சிடன்டுகள் முடி உதிர்வதை தடுக்க உதவும். கூந்தலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க துணைபுரியும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
  • உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குங்குமப்பூ நீர் பருகிவரலாம். பசியை போக்கி உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு துணைபுரியும்.
  • மாதவிடாய் காலத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு குங்குமப்பூ நீர் பலன் தரும். வலியைக் குறைத்து, உடல் இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும்.
  • ஐந்து, ஆறு குங்குமப்பூ இழைகளை ஒரு டம்ளர் சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பருகலாம். டாக்டரிடம் ஆலோசனை பெற்று பருகுவது நல்லது.