கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் Chocolate Brownie! செய்வது எப்படி?

பொதுவாக கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் Chocolate Brownie.இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடும் ஒரு கேக்காக இது மாறிவிட்டது.

அந்தவகையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு எளிய முறையில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய Chocolate Brownie எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
 • மைதா – 1/2 கப்
 • உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
 • சர்க்கரை – 3/4 கப்
 • முட்டை – 2
 • கொக்கோ பவுடர் – 1/3 கப்
 • வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
 • பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
 • சாக்லேட் சிப்ஸ் – 1 கப்
 • உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
 • முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
 • பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனை எடுத்து, அதன் மேல் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
 • பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும்.
 • பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 • இப்போது அதில் கொக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும்.
 • பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
 • பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பிவிடவும்.
 • பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான Chocolate Brownie தயார்.