பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கிறேனா?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் முல்லைக்காகவே பலர் இந்த சீரியலை பார்க்கிறார்கள் என்றே கூறலாம். அப்படி மக்களை கட்டிப்போட்ட அவர் நம்மைவிட்டு பிரிந்திருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் அவர் வேடத்தில் சீரியலில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துவிட்டது. அதோடு ஆயுத எழுத்து சீரியல் புகழ் சரண்யா முல்லை வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தது.

இதை கேள்விப்பட்ட சரண்யா முல்லை வேடத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அந்த வேடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.