தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் ட்ராப் செய்யப்பட்ட ‘சூதாடி’ படத்தின் First லுக்.. செம்ம மாஸ் போஸ்டர் இதோ..!

தனுஷின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நான்கு திரைப்படங்களாக விளங்கி வருவது, பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன்.

இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர்கள் இருவரின் கூட்டணி என்றுமே தோற்றதாக சரித்திரமே இல்லை.

2015ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில், சூதாடி எனும் திரைப்படம் துவக்கப்பட்டு, படப்பிடிப்பு முழுமூச்சாக சென்றது. ஆனால் அப்படம் தீடீரென ட்ராப் செய்யப்பட்டது.

இந்நிலையில் அப்படம் ட்ராப் ஆனது குறித்து மனா திறந்து பேசியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இதில் சூதாடி படத்தின் எடிட் செய்த காட்சிகளை பார்த்த பொழுது ஆடுகளம் படத்துடன் பல ஷாட்ஸ், மூட், டெம்போ ஒன்று போலவே இருந்ததாம். அதனால் தான் அப்படம் ட்ராப் செய்யப்பட்டதாம்.

அப்படி வெற்றிமாறன் மற்றும் தனுஷின் வெற்றி கூட்டணியில் துவங்கி இப்படத்தின் First லுக் போஸ்டரை பாத்துள்ளீர்களா.. இதோ..