சூரரை போற்று படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா செய்த விஷயம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர், சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக நலன்களை செய்து தனது ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் OTTயில் வெளியான சூரரை போற்று திரைப்படம், மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

மேலும் சூர்யா தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூரரை போற்று படத்தில் நிறைய காட்சிகளை நிக்கி விட்டனர். இதனால் பல முக்கிய காட்சிகள் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

மேலும் தற்போது படத்தில் எடுக்கப்பட்ட இதுவரை பார்த்திராத ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதில் நடிகர் சூர்யா ஏர் உழுவ பயன்படும் கலப்பையை வைத்து உடற்பயற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.