பிரபல இயக்குநரை பைத்தியக்காரன் என திட்டிய இளையராஜா!

தமிழ் சினிமாவில் கடும் உடல் வலியை கொடுக்கும் படங்கள் என்றால் அது இயக்குநர் பாலாவின் படங்கள் தான். படத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் கதைகளால் சினிமாவில் பெரிய மையப்புள்ளியாக இருந்து வருகிறார்.

அதிலும் நான் கடவுள், பரதேசி போன்ற படங்களில் அநியாயத்திற்கு அந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.

அப்படிப்பட்ட அது திறமை வாய்ந்த பாலாவை பிரபலம் ஒருவர் பைத்தியக்காரன் என்று கூறியது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

ஆனால் உண்மை தெரிந்த பிறகு இருவரும் இப்படியா என ஆச்சரியப்படுகின்றனர். பாலாவின் படங்களில் பெரும்பாலும் இசையமைப்பாளராக இருப்பது இளையராஜா தான்.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் வரும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் காட்சிகளை பார்த்து உண்மையிலேயே மிரண்டு விட்டாராம் இளையராஜா.

பைத்தியக்காரன் என்ன இப்படி எடுத்து வைத்திருக்கிறான் என ஆச்சரியப்பட்டாராம். அதேபோல் பாலாவின் படங்களுக்கு இசையமைக்கும் போது மட்டும் இளையராஜாவுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமாம்.

ஏதாவது ஒன்று புதிதாக செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பே. இளையராஜாவுக்கு பிடித்த இயக்குனர்களில் பாலாவும் ஒருவராம்.

இப்படிப்பட்ட பாலாவுக்கு சமீபகாலமாக என்ன ஆனது என்றே தெரியவில்லை. கண்டிப்பாக பாலா ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.